இலங்கை செய்திகள்

இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் காலமானார்.

இலங்கையின் மூத்த கல்வியியல் பேராசிரியர் சோ.சந்திரசேகரம் தமது 78வது வயதில் காலமானார்.

நேற்று இரவு அவர் காலி -பலப்பிட்டிய என்ற இடத்தில் உள்ள விருந்தகம் ஒன்றில் தங்கியிருந்தபோதே மாரடைப்பால் காலமானதாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரின் உடலம் தற்போது பலப்பிட்டிய மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

1944 டிசம்பர் மாதம் பிறந்த பேராசிரியர் சந்திரசேகரம், இலங்கையின் தமிழ் கல்வி வரலாற்றில் பாரிய பங்களிப்புக்களை செய்தவராவார்.

பதுளையை பிறப்பிடமாகக்கொண்ட பேராசிரியர் சோ. சந்திரசேகரம் கல்வியியல் துறையில் பேராதனை பல்கலைக்கழகம் மற்றும் ஹிரோசிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியாவார்

கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல் துறை முன்னாள் பீடாதிபதியாகவும், தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவராகவும் மற்றும் கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவராகவும் அவர் பணியாற்றினார்.

சமூக பிரஜைகளுடன் செயற்பட்டு தமது எழுத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளின் மூலம் சமூக மேம்பாட்டுக்காக பாடுபடுபவர். இவர் தமிழ், ஆங்கில, சிங்கள மொழிகளில் புலமை கொண்டவர் என்பதுடன் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்ற கொள்கையை முதன் முதலில் முன்மொழிந்த சோ.சந்திரசேகரம், அந்த கொள்கையில் ஒன்று உறுதியாகவும் இருந்தார்.

Related posts

உலகிலேயே ஆறாவது இடம்பிடித்த இலங்கை – ஆசியாவில் முதலிடம்

Thanksha Kunarasa

மாலைதீவில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நீச்சல் – சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு.

namathufm

ரயிலில் மோதுண்டு ஒருவர் மரணம்

Thanksha Kunarasa

Leave a Comment