நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை கருத்திற்கொண்டு, மேல் மாகாணத்தில் பேராயர் இல்லத்துக்கு உட்பட்ட சகல கத்தோலிக்க பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பேராயர் இல்லம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் 4ஆம் திகதி திங்கட்கிழமையிலிருந்து 8ஆம் திகதிவரை மேல் மாகாணத்திலுள்ள கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் மற்றும் கத்தோலிக்க தேசிய பாடசாலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொதுமுகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.