உலகம் செய்திகள்

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் போர்நிறுத்தம்!

முஸ்லிம்களின் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு யேமனில் இரண்டு மாத போர்நிறுத்தம் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு நாடு தழுவிய அளவில் செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் இதுவாகும்.

பல இஸ்லாமியர்களுக்கு இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தின் முதல் நாள் நேற்று ஆகும்.
சவுதி தலைமையிலான கூட்டணிக்கும், ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான ஒப்பந்தம் நேற்று 16:00 மணிக்கு நடைமுறைக்கு வருகின்றது.

போர்நிறுத்தம், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட யேமன் மக்களுக்கு ஒரு நிவாரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பாராட்டினார்.

மேலும் இவை முக்கியமான படிகள், ஆனால் அவை போதாது. போர் நிறுத்தம் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். நான் முன்பு கூறியது போல், இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவது அவசியம்’ என கூறினார்.

யேமனில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி தலைமையிலான அரச படைகளுக்கும், ஈரான் ஆதரவு ஹெளதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சண்டை நடந்து வருகிறது.

இதில் யேமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்து வருகிறது. இதனால், விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் நிறுவல்கள் உள்ளிட்ட சவுதி இலக்குகள் மீது அடிக்கடி ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஹெளதிகள் நடத்தி வருகின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்பீட்டின்படி, கிட்டத்தட்ட 400,000 பேரைக் கொன்ற போரில், 60 சதவீத பேர் பசி, சுகாதாரப் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பற்ற தண்ணீரால் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி செயலகத்துக்குள் பதற்றம்!

Thanksha Kunarasa

அதிகளவு பணம் அச்சிடப்பட்டுள்ளதால் பணவீக்கம் அதிகரித்துள்ளது: மத்திய வங்கியின் புதிய ஆளுநர்

Thanksha Kunarasa

கண்டி,கம்பளையில் மஹாவலி கங்கையில் மூழ்கி இருவர் மரணம் !

namathufm

Leave a Comment