இலங்கை செய்திகள்

கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக எதிர்க் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக உள்ள வீதியில் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டது.

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பிகள் குறித்த பகுதியில் இன்று காலை 10.00 மணிக்கு ஒன்றுகூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் சுதந்திர சதுக்கத்துக்கு உள்நுழைவதற்கு முயற்சித்தனர்.

இந்நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை சுதந்திர சதுக்கத்துக்கு செல்லவிடாது பொலிஸார் தடுப்பு அரண்களை அமைத்து பாதுகாப்பை பலப்படுத்தினர்.

எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, லக்ஷ;மன் கிரியெல்ல, கபிர் ஹாசிம், சுமந்திரன், மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், வடிவேல் சுரேஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியின் அனைத்து எம்பிகளும் அவ்விடத்தில் கூடினர்.

இதேவேளை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணிக்கு அவ்விடத்தில் கூடிய எம்.பிக்கள் தொடர்ந்தும் அவ்விடத்திலேயே இருந்ததுடன், சுதந்திர சதுக்கத்துக்கு செல்வதற்கு முயற்சித்த நிலையிலேயே பொலிஸார் அதனை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பம்

Thanksha Kunarasa

திருட்டு குற்றச்சாட்டில் இளைஞன் கைது

Thanksha Kunarasa

இந்தியக் கிரிக்கெட் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: வெற்றியை நோக்கி நகரும் தென்னாபிரிக்கா!

editor

Leave a Comment