இலங்கை செய்திகள்

யாழில் நேற்று குழப்பத்தில் ஈடுபட்ட நபர் குறித்து வெளியான தகவல்!

பிலியந்தலை பகுதியை சேர்ந்த இருவரே, யாழில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

யாழில், ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. அதன் போது தேசிய கொடியுடன் வந்த மூவர் போராட்டக்காரர்களுடன் முரண்பட்டனர்.

அதில் ஒருவர் தனது கையடக்க தொலைபேசியில் காணொளி பதிவினை மேற்கொண்டவாறே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் முரண்பட்டார்.

குறித்த மூவரில் ஒருவர் தற்போது யாழில் வசித்து வரும் நிலையில் மற்றைய இருவரும் பிலியந்தல பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இலங்கையின் சுதந்திர தினத்தினை வடக்கில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டத்தினை முன்னெடுத்த போது , நேற்றைய தினம் போராட்டத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய மூவரும் யாழ்.நகர் பகுதியில் தேசிய கொடிகளுடன் பேரணி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஸ்யா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை ஆரம்பம்.

Thanksha Kunarasa

இலங்கையில் மிகவும் பழமை வாய்ந்த சிவலிங்கம் கண்டுபிடிப்பு

Thanksha Kunarasa

அடுத்தவாரம் புதிய அமைச்சரவை

Thanksha Kunarasa

Leave a Comment