சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்துவதற்காக நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அடுத்த வாரம் வாஷிங்டனுக்கு செல்லவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
எதிர்வரும் 8ஆம் திகதி அமெரிக்கா செல்லும் அவர் எதிர்வரும் 11ஆம் திகதி சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை சந்தித்துப் பேச்சு நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.