ஐக்கிய மக்கள் சக்தியில் ஏற்பாட்டில், தற்போது நாட்டில் உள்ள பொருட்கள் விலையேற்றத்துக்கு அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது.
இப்போராட்டத்தை குழப்பும் விதமாக செயற்பட்ட கோத்தபாய அரசின் அருவருடியான அருண் சித்தார்த் தலைமையிலான மூவர், போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களினால் தாக்கப்பட்டு பொலிசாரினால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு உள்ள நிலையில் மூவரில் ஒருவருக்கு உடல் நலக்குறைவு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன