இலங்கை செய்திகள்

மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் மக்கள் ஆர்ப்பாட்டம்; பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

மிரிஹான பெங்கிரிவத்தை வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

மக்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் வீட்டிற்கு செல்லும் மிரிஹான – பெங்கிரிவத்தை வீதியில் நேற்று பிற்பகல் முதல் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகவும், அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்திற்கு எதிராகவும் மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலக வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்

Related posts

சிறுமிகளை அச்சுறுத்திய இலங்கை இளைஞன்

Thanksha Kunarasa

20ஆவது திருத்தத்தை நீக்குக – மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து!

Thanksha Kunarasa

50-வது நாளில் உக்ரைன் – ரஷ்யா போர் அமைதியை வலியுறுத்தும் உலக சுகாதார நிறுவனம்

Thanksha Kunarasa

Leave a Comment