இலங்கை செய்திகள்

மிரிஹானயில் கைதானவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ​ழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது: SLHRC

நுகேகொடை – மிரிஹான பகுதியில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீ​ழ் வழக்கு தாக்கல் செய்ய முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியின் வீட்டருகில் நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை நுகேகொடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் சிலர் இன்று காலை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் சாதாரண சட்டத்தை தவிர்ந்து, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மீண்டும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம்

Thanksha Kunarasa

லங்கா IOC டீசல், பெற்றோல் விலைகள் அதிகரிப்பு!

Thanksha Kunarasa

பிரான்சில் தேசிய ஒற்றுமை அரசு ஒன்றுக்கு தேசிய ஒற்றுமை அரசு ஒன்றுக்கு எதிர்க்கட்சிகள் இணங்கவில்லை! அரசியல் நிலைவரம் குறித்த உரையில் மக்ரோன் தகவல்!

namathufm

Leave a Comment