இலங்கை செய்திகள்

மஹிந்தவும் நாமலும் மிரிஹானவுக்கு விஜயம்

மிரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் தனிப்பட்ட வாசஸ்தலத்துக்கு முன்பாக, நேற்றிரவு கடுமையான பதற்றம் நிலவியது. ஆர்ப்பாட்டக்கார்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்கள், கையில் கிடைத்தவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பாதுகாப்பு தரப்பினர், தண்ணீர் பீச்சிய​டித்து ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்ட முயற்சி செய்தனர். அதன்பின்னர், குண்டாந்தடி பிர​​யோகம் மேற்கொண்டனர். இறப்பர் குண்டுகளால் சுட்டனர். இதில் பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டன. பஸ்ஸொன்று தீக்கிரையாக்கப்பட்டது.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகிய இருவரும், மிரிஹானைக்கு களவிஜயம் ​மேற்கொண்டு நிலைமையை ஆராய்ந்து வருகின்றனர்.

Related posts

அணுவாயுதத் தடுப்புப் படை ஆயத்த நிலை ! புடின் உத்தரவு ! !

namathufm

எல்லை கடக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்ப திட்டம் – அமெரிக்கா, கனடா..!

namathufm

பாரிஸ் ஈபிள் கோபுரம் ஆறு மீற்றர் வளர்ந்தது – உச்சியில் அன்டெனா!

namathufm

Leave a Comment