தெனியாய – கொட்டப்பொல மெதகொடஹேன, நாரன்தெனிய, கொஸ்மோதர பிரதேசத்தில் கணவரால் மனைவி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 07.00 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதால் கணவர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார்.
மூத்த மகனால் செய்யப்பட்ட முறைப்பாட்டைத் தொடர்ந்து, காயமடைந்த பெண் அம்பியூலன்ஸ் மூலம் தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
5 பிள்ளைகளின் தாயான 36 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக தெனியாய வைத்தியசாலையில் இருந்து மாத்தறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான, உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமறைவாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொஸ்மோதர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.