இலங்கை செய்திகள்

கட்டணம் செலுத்தாததால் டீசலுடன் 7 நாட்களாக நங்கூரமிட்டுள்ள சிங்கப்பூர் கப்பல்

37,500 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாளை (02) நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டது.

இந்திய கடன் வசதியின் கீழ், டீசலுடனான குறித்த கப்பல் நாட்டிற்கு வருகை தரவுள்ளது.

எவ்வாறாயினும், 37,500 மெட்ரிக் தொன் டீசலுடன் நாட்டை வந்தடைந்துள்ள சிங்கப்பூரின் விடோல் நிறுவனத்திற்கு சொந்தமான கப்பலுக்கு செலுத்த வேண்டிய 52 மில்லியன் டொலர் நேற்று மாலை வரை செலுத்தப்பட்டிருக்கவில்லை.

இன்றுடன் 7 நாட்களாக அந்த கப்பல் சர்வதேச கடற்பிராந்தியத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.

இதனிடையே, இலங்கை- இந்திய ஒயில் நிறுவனம் 6000 மெட்ரிக் தொன் டீசலை மின்னுற்பத்தி நடவடிக்கைகளுக்கு பெற்றுக்கொடுக்க நேற்று இணக்கம் தெரிவித்தது.

திருகோணமலையிலுள்ள லங்கா IOC களஞ்சியசாலையிலிருந்து இந்த டீசல் தொகை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

Related posts

மேற்கத்திய நாடுகளின் ஆயுத வாகனங்களை தாக்குவோம்- ரஷியா எச்சரிக்கை

Thanksha Kunarasa

சண்டிலிப்பாயில் வீட்டின் மீது தாக்குதல்!

Thanksha Kunarasa

நீதி கோரி கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில்!!

namathufm

Leave a Comment