இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் தந்தை செல்வா 124 வது அகவை நாள் நினைவு !

இலங்கை தமிழரசுக்கட்சியின் நிறுவுனர், தலைவரான எஸ்.ஜெ.வி. செல்வநாயகத்தின் (தந்தை செல்வா) 124 வது அகவை நாள் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட இடங்களில் நினைவு கூறப்பட்டது .

இன்றைய நாள் காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தந்தை செல்வா நினைவிடத்தில், தந்தை செல்வா அறக்கட்டளை நிலையத்தின் தலைவரும் தென்னிந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயருமான சுப்பிரமணியும் ஜெபநேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து, நினைவுத் தூபிக்கு மலர் தூவி வணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது, இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.சுகிர்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

காலிமுகத்திடலில் நிறுவப்பட்ட வலையமைப்பு கோபுரத்தை அகற்றிய டயலொக்!

Thanksha Kunarasa

சிறிலங்காவின் 74வது சுதந்திரதினத்தை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் மக்களாலும் நேற்று போராட்டங்கள்

namathufm

ஹம்பாந்தோட்டையில் இருவர் சுட்டுக் கொலை

Thanksha Kunarasa

Leave a Comment