அமெரிக்காவின் வெள்ளை மாளிகையை நினைவுபடுத்துவதாய் அமைந்திருந்த யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான மாநகர மண்டபம் யுத்த சூழ்நிலையால் சேதமடைந்தது. கடந்த ஆட்சியில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவினால் (2019) செப்ரெம்பர் 7 அடிக்கல் நாட்டப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்டுமானப் பணிகள் துரித கதியில் இடம் பெற்று வருகிறது்.

இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டுமான வேலைகள் முடிக்கும் வகையில் இடம் பெற்று வருகிறது. சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்பாக யாழ்ப்பாணம் மாநகர முன்னாள் மண்டபம் அமைந்திருந்த வளாகத்தில் புதிய மண்டபம் 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்படுகிறது.
உள்நாட்டு போர் காரணமாக 1980ஆம் ஆண்டு காலப்பகுதியில் அழிவடைந்த யாழ்ப்பாண மாநகர சபையின் நிரந்தர மண்டபத்தை மீளவும் புதிதாக நிர்மாணிப்பதற்கு 2 ஆயிரத்து 350 மில்லியன் ரூபா நிதி நகர அபிவிருத்தி அமைச்சராக இருந்த சம்பிக்க ரணவக்க ஊடாக ஒதுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிருஜன்