உலகம் செய்திகள்

பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்!

அமெரிக்க விண்வெளி வீரர், ரஷ்ய விண்வெளி கேப்சூலில் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு திரும்பினார்.

நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் (Mark Vande Hey). இவர் கடந்த 2021, ஏப்ரல் 9-ம் திகதி அன்று சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணி மேற்கொள்வதற்காக பூமியில் இருந்து புறப்பட்டார்.

இவர் சமீபத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 355 நாட்கள் தங்கியிருந்து பணி செய்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ஸ்காட் கெல்லி (Scott Kelly) விண்வெளியில் தொடர்ந்து 340 நாட்கள் தங்கியிருந்ததே சாதனையாக இருந்தது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளியில் பணி மேற்கொள்வதற்காக 355 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்த விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய், கஜகஸ்தானில் ரஷ்ய விண்வெளி காப்ஸ்யூலில் பூமிக்கு திரும்பினார்.

அவர் பூமிக்கு திரும்புவதை நாசா நேரடி ஒளிபரப்பு செய்தது. மேலும் அவருடன் இரண்டு ரஷ்ய விண்வெளி வீரர்களும் (அன்டன் ஷ்காப்லெரோவ் (Anton Schaplerov) மற்றும் பியோட்ர் டுப்ரோவ்(Pyotr Dubrov) பூமிக்கு திரும்பினர்.

பூமிக்கு திரும்பிய இவர்கள் மூவரும் மீண்டும் தங்களது வழக்கமான பணியை மேற்கொள்ள உள்ளனர்.

Related posts

ஹாலிவுட் ‘ஸ்டண்ட்’ இயக்குனருடன் சமந்தா..

Thanksha Kunarasa

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!!

namathufm

ஜேர்மனி கொள்கை மாற்றியது உக்ரைனுக்கு போராயுத உதவி!! ஆயிரம் ரொக்கட் லோஞ்சர்கள்! 500 விமான எதிர்ப்பு ஏவுகணை!!

namathufm

Leave a Comment