இலங்கை செய்திகள்

ஔடதங்களின் விலைகளை மீள அதிகரிக்குமாறு கோரிக்கை

ஔடதங்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்குமாறு ஔடத இறக்குமதியாளர்கள் சங்கத்தினர் சுகாதார அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் செயலாளர், வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அவர்களின் கோரிக்கையை மதிப்பீட்டிற்காக சமர்ப்பித்துள்ளதாக இராஜாங்க அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, சில மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அரச வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Related posts

இரத்தக் கரையுடன் வீதியோரம் சடலம் – யாழில் சம்பவம் .

namathufm

சுவீடன் கொட்லான்ட் தீவு அருகே ரஷ்ய போர் விமானங்கள் மீறல்!

namathufm

29 வைத்தியசாலைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தர மாணவர்களுக்காக சிறப்புத் தேர்வு நிலையங்கள்.

namathufm

Leave a Comment