இலங்கை செய்திகள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளுக்கு இது தான் காரணம் !

இலங்கை எதிர்கொண்டு நிற்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இலங்கை அரச நிறுவனங்களின் (State Owned Enterprises) தோல்வி மிக முக்கியமான காரணமாக இருக்கின்றது குறிப்பாக, கடந்த ஆண்டு மட்டும் இலங்கைக்கு அரசுக்கு சொந்தமான இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (Ceylon Petroleum Corporation) 61,886 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருந்தது .

இலங்கை மின்சார சபைற்கு 929 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருந்தது அதே போல தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை (National Water Supply and Drainage Board) 825 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது.

இது மாத்திரமின்றி விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் (Airport and Aviation Services) 1,792 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருந்தது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (Sri Lankan Airlines) ரூபா 24,800 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது அதே போல இலங்கை போக்குவரத்து சபை (Sri Lanka Transport Board) 3,215 ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது.

இது தவிர, அரச பொறியியல் கூட்டுத்தாபனம் (State Engineering Corporation) 730 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது மத்திய பொறியியல் உசாத்துணை பணியகத்திற்கு (Central Engineering Consultancy Bureau) 6 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருந்தது அதே போன்று அரச அபிவிருத்தி மற்றும் கட்டுமான நிறுவனம் (State Development and Construction Corp) 106 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருந்தது.

அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் (Sri Lanka State Plantations Corporation) ரூபா 95 மில்லியன் நட்டத்தை சந்தித்து இருந்தது ஜனதா தோட்ட அபிவிருத்தி சபை (Janatha Estates Development Board) 118 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது. களுபோவிடியன தேயிலை தொழிற்சாலைற்கு (Kalubovitiyana Tea Factory) 34 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டு இருகின்றது.

இலங்கை சுயாதீன தொலைக்காட்சி சேவை (Independent Television Network Ltd) 244 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி நிறுவனம் (Sri Lanka Rupavahini Corporation) ரூபா 56 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டு இருந்தது.

இலங்கை கைப்பணி பொருள்கள் சபை (Sri Lanka Handicraft Board) ரூபா 58 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது சதொச நிறுவனத்திற்கு (Lanka Sathosa Ltd) ரூபா 151 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருந்தது இலங்கை அச்சக கூட்டுத்தாபனம் (State Printing Corporation) ரூபா 226 மில்லியன் ரூபா நட்டத்தை எதிர்கொண்டு இருந்தது.

இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபனம் (Ceylon Fisheries Corporation) ரூபா 43 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது. இலங்கை மீன்பிடி துறைமுக கூட்டுத்தாபனத்திற்கு (Ceylon Fishery Harbour Corporation) ரூபா 83 மில்லியன் நட்டம் ஏற்பட்டு இருந்தது. இது போதாதென்று ஹோட்டல் அபிவிருத்தி நிறுவனத்திற்கு (Hotel Developers Lanka Ltd) ரூபா 153 மில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்து இருந்தது.

இந்த நிலைமை வெறுமனே அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் மட்டுமின்றி அரசாங்கத்தின் சகல அமைச்சுக்கள் , திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள் என மத்திய அரசின் நிர்வாக அலகுகள் தொடக்கம் மாவட்ட அரச செயலகங்கள் வரை தொடருகின்றது குறிப்பாக வினைத்திறனற்ற நிதி நிர்வாகம் , வளங்களின் வீண் விரயம், ஊழல் மோசடிகள் , அளவுக்கதிமான அரச ஊழியர்கள் , அரசியல் தலையீடுகள் , அரசியல் நியமனங்கள் போன்ற பல காரணங்களினால் அரச நிறுவனங்கள் தோல்வியடைகின்றன.

தோல்வியடைகின்ற அரச நிறுவனங்கள் சர்வதேச ரீதியாக ஏற்படும் விலை தளம்பல்களை எதிர்கொள்ள முடிவடைவதில்லை. இதனால் தோல்வியடைகின்ற நிறுவனங்கள் தங்கள் நட்டங்களை நட்டங்களை பொதுமக்கள் மீது சுமத்தி விடுகின்றார்கள் குறிப்பாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் கடந்த ஆண்டு மட்டும் ஏறத்தாழ 62 000 மில்லியன் ரூபா நட்டமடைந்து இருக்கின்ற நிலையில் சர்வதேச விலை மாற்றங்களை தனித்து எதிர்கொள்ள முடியாமல் தவிர்க்கின்றது.

ஆகவே வெறுமனே மீள மீள கடன்களை பெற்று கொள்ளுவதன் மூலம் மேற்படி நெருக்கடிகளை கட்டுப்படுத்த முடியாது சக்தி மிக நாடுகளாக உருவாகி வரும் ருவாண்டா , பங்களாதேஷ் , வியட்நாம் , எத்தியோப்பியா போன்று இலங்கை தனது செயன்முறைகளையும் அரச நிறுவனங் கட்டமைப்புகளையும் மீள கட்டி எழுப்புவதன் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும்.

ச.தவசீலன்

Related posts

பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா – வைத்தியசாலையில் அனுமதி

Thanksha Kunarasa

பாகிஸ்தானில் புதிய அமைச்சரவை பதவியேற்பு; அதிபர் கலந்துகொள்ளவில்லை

Thanksha Kunarasa

பதுளை பிராந்தியத்தில் நேற்றைய நாள் (27/01) 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

namathufm

Leave a Comment