இலங்கை செய்திகள்

இராணுவ வாகனங்கள் தீக்கிரை கொழும்பில் பொலீஸ் ஊரடங்கு!!

இலங்கை நெருக்கடி வலுக்கிறதுஅதிபர் இல்லம் முன் ஆர்ப்பாட்டம்சிறிலங்காவில் பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் நிலையில் அரசு அதனைக் கையாளும் முறைக்கு எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

நாட்டின் அதிபரது வதிவிடம்அருகே நடந்த ஆர்ப்பாட்ட மோதல்களில் இராணுவ வாகனங்கள் எரிக்கப்பட்டதை அடுத்துத் தலை நகரின் பல பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலாகியிருக்கிறது. இராணுவ வாகனங்கள் எரிக்கப்படும் காட்சிகள் அடங்கிய News Wire வீடியோ சமூகவலைத் தளங்களில் வெளியாகியுள்ளது.

கொழும்பில் அதிபர் கோட்டாபய ராஜபக்சேயின் தனிப்பட்ட வாசஸ்தலம் அமைந்துள்ள மிரிஹான பென்கிரிவத்த பகுதியில் இன்று மாலை திரண்ட ஆத்திரக்காரர்கள் அங்கு வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்துப் பெரும் எண்ணிக்கையான பொலீஸாரும் அதிரடிப்படையினரும் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து விரட்டுவதற்காகப் பொலீஸார் கண்ணீர்ப்புகை வீச்சு மற்றும் தடியடி நடத்தியதால் அங்கு பெரும் பதற்றமும் முறுகல் நிலையும் ஏற்பட்டதாகக் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. நகரின் ஏனைய சில இடங்களிலும் வீதி ஆர்ப்பாட்டங்கள்நடைபெற்றுள்ளன. கண்டி – கொழும்பு நெடுஞ்சாலைப் போக்குவரத்துக்களையும் ஆர்ப்பாட்டக்காரர் தடுத்து முடக்கியுள்ளனர் எனச் செய்தி வெளியாகியிருக்கிறது.

நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்குடன் கொழும்பு வடக்கு, தெற்கு, மத்திய பகுதிகளிலும் மற்றும் நுகேஹொட பொலீஸ் பிரிவிலும் பொலீஸ் ஊரடங்கு நடை முறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்ற சமயம் அதிபர் ராஜபக்சே வதிவிடத்தில் தங்கியிருந்தாரா என்பது உடனடியாகத் தெரியவரவில்லை. அதிபரைப் பதவி விலகுமாறுகோரும் சுலோகங்களை ஆர்பாட்டக்காரர்கள் வைத்திருக்கின்ற படங்களை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இராணுவத்தினரது வாகனங்கள் எனக் கூறப்படும் பஸ் மற்றும் ஜீப் வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன என்றும் மோதல்களில் காயமடைந்தவர்கள் எனக் கூறப்படும் ஆறுபேர் இன்றிரவு கொழும்பின் தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் எனவும் கூறப்படுகிறது.

செய்தியாளர்கள் சிலரும் காயமடைந்தனர் என்று ஊடகங்கள் தெரிவித்தன.வெளிநாட்டு நாணய மாற்று நெருக்கடி பணவீக்கம் காரணமாக இலங்கையின் பொருளாதார நிலை படு மோசமான கட்டத்தை அடைந்துள்ளது. சகல பொருள்களினதும் விலைகள் நாளாந்தம் அதிகரித்துச் செல்வதும் தினமும் 13 மணிநேரம் நீடிக்கும் மின்வெட்டும் அங்கு இயல்பு வாழ்க்கையைப் பாதித்துள்ளது.

மின் துண்டிப்பு மற்றும் , அவசிய மருந்துகள்தட்டுப்பாடு காரணமாக பல அரசு மருத்துவமனைகளில் சத்திரசிகிச்சைகள் தடைப்பட்டுள்ளன. மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதாக அதிபர் ராஜபக்சே தனது கடைசி தொலைக்காட்சி உரையில் உறுதி அளித்திருந்தார். ஆனால் அவரது அரசு பொருளாதார நெருக்கடியைக் கையாளும் விதம் குறித்துப் பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

யாழில் – மின்சார தாக்கி ஒருவர் உயிரிழப்பு !

namathufm

பாதுகாப்பு அமைச்சின் விஷேட அறிக்கை!!

namathufm

நிதியமைச்சர் தலைமையிலான குழு வொஷிங்டன் புறப்பட்டனர்

Thanksha Kunarasa

Leave a Comment