முதல் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்த சென்னை அணி, அதே நிலையில் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2022 இன் 7வது ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸை எதிர்கொள்கிறது. கொல்கத்தா அணிக்கு எதிராக வெளிப்பட்ட சென்னை அணியின் பதற்றத்தை தனக்கு சாதகமாக்கி வெற்றியை குவிக்க திட்டம் வகுக்கிறது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.
இந்தப் போட்டி மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ஜடேஜா கொல்கத்தாவுக்கு எதிராக பதற்றத்துடன் காணப்பட்டார். அவரது கேப்டன்சி அணுகுமுறையும் தோனியுடன் ஒப்பிடப்பட்டு விமர்சிக்கப்பட்டது.
க்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தனது முதல் ஐ.பி.எல் விளையாட்டை சக புதிய அணியான குஜராத் டைட்டன்ஸ் (GT) க்கு எதிராக விளையாடியது மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான அந்த அணி நெருக்கமான வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.