இலங்கை செய்திகள்

இன்றைய தினம்(31) 13 மணி நேர மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்(31) 13 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய,

⭕ A,B,C,D,E மற்றும் F ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ G,H,I,J,K மற்றும் L ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்சார விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

⭕P,Q,R மற்றும் S ஆகிய வலயங்களில் அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

⭕ T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை 03 மணித்தியாலங்களுக்கும் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 06 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

⭕ M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 9 மணி வரை 03 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கும் மாலை 4 மணி முதல் 6 மாலை மணி வரை 02 மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

Related posts

ரஷ்ய நாட்டு கப்பலை கைது செய்த பிரான்ஸ் பொலிஸார்.

Thanksha Kunarasa

ஹப்புத்தளையில் மனைவியை சரமாரியாக கத்தியால் குத்திய கணவன்.

namathufm

வானொலி தகராறினால் ஒருவர் வெட்டிக் கொலை

Thanksha Kunarasa

Leave a Comment