இன்று மாலை 5 மணியுடன் அனைத்து எரிபொருளில் இயங்கும் மின் விநியோகமும் நிறுத்தப்படும்.
நுரைச்சோலை மற்றும் நீர் மின்சாரம் மட்டுமே எஞ்சியுள்ளது. அவர்களிடமிருந்து 1200 மெகாவோட் பெறப்படும், அது 10 மணிநேரத்திற்கு மட்டுமே போதுமானது.
14 மணிநேர மின்வெட்டு எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இந்திய எண்ணெய் நிறுவனம் (IOC) மின் உற்பத்தி நோக்கங்களுக்காக 6,000 மெற்றிக் தொன் டீசலை வழங்க இணங்கியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை,
மின்சார தடைகள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகள் காரணமாக அஞ்சல் சேவைகளில் தாமதம்: அஞ்சல் திணைக்களம் தெரிவிப்பு.
டீசல் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாளை (01) முதல் அனைத்து கொள்கலன் வாகனங்களும் சேவையில் ஈடுபடாது- ஐக்கிய இலங்கை கொள்கலன் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவிப்பு.