கல்கிசை முதல் காங்கேசன்துறை வரையிலான புதிய வார இறுதி ரயில் சேவை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
இதன்படி கல்கிசையில் இருந்து இரவு 10 மணிக்கு ஆரம்பிக்கும் ரயில் வவுனியவை அதிகாலை 3.15 க்கும், கிளிநொச்சியை 4.25 க்கும், யாழ்ப்பாணம் 5.28 க்கும், காங்கேசன் துறையை 5.54 இற்கும் வந்தடையும்.
பின்னர் ஞாயிற்றுக்கிழமை (10 ஆம் திகதி) இரவு 10 மணிக்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் ரயில் யாழ்ப்பாணத்தை 10.24 க்கும் கிளிநொச்சியை 11.29 இற்கும் வவுனியாவை 12.38 இற்கும், மருதானையை 5.20 இற்கும், கல்கிசையை 5.54 இற்கும் சென்றடையும்.
இந்த ரயில் சேவைக்கு இந்தியாவில் இருந்து இறக்குமதியான S13A power set ரயில் பயன்படுத்தப்படும்.