இலங்கை செய்திகள்

பாடசாலை போக்குவரத்து சேவை இனி இல்லை!!

எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

எந்தவொரு ஆதரவும் கிடைக்காவிட்டாலும், பரீட்சை மற்றும் கல்விசார் நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.எம்.கே ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமைக்குள் (1.04.2022) சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், தமது சேவைகளில் இருந்து விலகிக் கொள்வதாக அவர் எச்சரித்தார்.

Related posts

ஐரோப்பாவில் “குரங்கு அம்மை”! ஆபத்தான ஒரு தொற்று நோயா?

namathufm

சிறிலங்காவுக்கு  இந்தியா பாரிய  உதவிகளை வழங்குவது சாத்தியமில்லை – முன்னாள் இந்திய தூதுவர்

namathufm

சமையல் எரிவாயு ஏற்றுமதி கப்பல் நாளை அதிகாலை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை.

namathufm

Leave a Comment