உலகம் செய்திகள்

பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு

பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன.

இந்த தீர்மானத்தின் மீது நாளை(வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இம்ரான்கான் அரசுக்கு அளித்த ஆதரவை விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவளிப்பதாகவும் எம்.க்யூ.எம் கட்சி அறிவித்துள்ளது.

இதனால் இம்ரான்கானின் அரசு நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னரே பெரும்பான்மையை இழந்தது.

ஆட்சியை தக்கவைக்க பெரும்பான்மைக்கு 172 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்ற நிலையில் இம்ரான்கானுக்கு 164 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மட்டுமே உள்ளதால் ஆட்சி கவிழ வாய்ப்பு உள்ளது.

Related posts

அஜித் நிவாட் கப்ராலின் பயணத்தடை நீடிப்பு

Thanksha Kunarasa

இலங்கையர்களை வத்திக்கானுக்கு வருமாறு அழைப்பு.

Thanksha Kunarasa

மின் வெட்டு குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment