இலங்கை செய்திகள்

பதுளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்பம்!

பதுளை நகரின் மஹியங்கனை வீதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் கோரி வாகன சாரதிகள், வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் வைத்துக் கொண்டு விநியோகிக்க மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மூன்று நாட்களாக தாங்கள் டீசலுக்காக காத்திருப்பதாகவும் கூறி, வாகன சாரதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இது குறித்து எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளரிடம் கேட்டபோது, இறுதியாக வழங்கப்பட்ட 6600 லீட்டர் டீசலில் 2000 லீட்டர் அத்தியாவசிய தேவைகளுக்காக ஒதுக்கி வைக்குமாறு அரசாங்கத்தினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அத்தியாவசிய சேவைக்கு விநியோகிக்குமாறு கடித மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதன் படி தாம் செயற்படுவதாகவும் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

Related posts

முதல் தடவையாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது!

namathufm

ஜெனீவாவில் சிறப்பான சந்தர்ப்பத்தை நழுவவிட்ட இலங்கை!

Thanksha Kunarasa

பொருளாதார நெருக்கடியால் தொலைபேசி, நவீன ஊடகங்கள் பாதிப்பு!

namathufm

Leave a Comment