மின்சாரம் துண்டிக்கப்படும் காலங்களில், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயங்க வைப்பதற்கு தேவையான டீசலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கோபுரங்களை செயற்படுத்துவதற்காக நேற்று(29) 3,000 லீட்டர் டீசல் மின்பிறப்பாக்கிகளுக்கு விடுவிக்கப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு நீடிப்பதால் தொலைத்தொடர்பு கோபுரங்கள் செயற்படுவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது.
தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான மின்பிறப்பாக்கிகளை இயக்குவதற்கு தேவையான எரிபொருளை அனைத்து சந்தர்ப்பங்களிலும் விநியோகிப்பதற்கு தமது அமைச்சு தயாராக உள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.