இலங்கை செய்திகள்

இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு!

இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு. இ.தொ.கா தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவுதவிசாளர் பதவிக்கு மருதபாண்டி ராமேஸ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தலைவர் பதவியை செந்தில் தொண்டமானுக்கும், தவிசாளர் பதவியை மருதபாண்டி ராமேஸ்வரனுக்கும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொட்டகலை CLF இல் இன்று நடந்த விசேட கூட்டத்தில் இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை கூடி, தலைவர், தவிசாளர் பதவிகளுக்கான தெரிவு ஏகமனதாக மேற்கொள்ளப்படவுள்ளது. எனினும், ஏனைய பதவிகளுக்கான தேர்தலை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தலைவர் பதவிக்கு ராமேஸ்வரன் போட்டியிடத் தயாரான போதும் செந்தில் தொண்டமானுக்கான ஆதரவு வலுத்ததால் இந்தத் தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு தரப்புக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியதால் இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த விவகாரத்தை சமரசம் செய்து வைத்ததாக அந்தக் கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பெலாரஷ்சியர்கள் ஆதரவு

Thanksha Kunarasa

இலங்கையில் இரண்டு மாதங்களில் அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை

Thanksha Kunarasa

உக்ரைன் தலைநகரை நெருங்கியது ரஷ்ய படைகள்!

Thanksha Kunarasa

Leave a Comment