உலகம் செய்திகள்

இஸ்ரேலில் ஐவர் சுட்டு கொலை

இஸ்ரேலின் Tel Aviv புறநகர் பகுதியில் ஐவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிதாரர் பலியாகியுள்ளார்.

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல், அரபு  பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அவசர கூட்டம் கூட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் பிரதமர் நப்தாலி பென்னட் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Related posts

இங்கிலாந்து உக்ரைனியர்களை கட்டுப்பாடின்றி உள்ளெடுக்காது!

namathufm

யாழில் ரயிலில் மோதி சிறுவன் பலி – இருவர் படுகாயம்!

Thanksha Kunarasa

“ஈயூநிஸ்” புயலின் மூர்க்கம்இங்கிலாந்தை உலுக்கியது!

namathufm

Leave a Comment