ஹோட்டல் கழிவறையிலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று மீட்பு – பாணந்துறை – பின்வத்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் குழி கழிவறையிலிருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் கடவத்தை பகுதியில் உள்ள கேளிக்கை விடுதியொன்றில் பணியாற்றிவந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நீதவானின் மேற்பார்வையில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.