இலங்கை செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி க்கு உத்தியோக பூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு தடை உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பெஜெட் வீதியில் அமைந்துள்ள உத்தியோக பூர்வ இல்லத்தை நிரந்தரமாக வழங்குவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இடை நிறுத்தி தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இலங்கை உச்ச நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ இல்லத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கிய அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்த்து மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் (CPA) மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து ஆகியோரால் FR மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மஹகம சேகர மாவத்தையில் (பேஜட் வீதி) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடியமர்த்தப்பட்டுள்ள இல்லமானது பெரும் நிதிப் பெறுமதி உடையது எனவும் அது நாட்டுக்கு பெறுமதியான சொத்து எனவும் அவர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

அரச தலைவரின் பணிகளை மேற்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக இவ்வளவு நிதி மதிப்புடைய பொதுச் சொத்தை ஒதுக்கீடு செய்வது பகுத்தறிவற்றது, தன்னிச்சையானது மற்றும் சட்டவிரோதமானது என்று CPA குற்றம் சாட்டியுள்ளது. மேலும், ஓய்வுபெறும் ஜனாதிபதியின் பலன்கள் குறித்து அமைச்சர்கள் அமைச்சரவை முடிவெடுப்பது போன்ற காரணங்களின் அடிப்படையில், அரசியலமைப்பின் 12(1) (சமத்துவத்திற்கான உரிமை) பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள மனுதாரர்கள் மற்றும் இலங்கையின் குடிமக்களின் அடிப்படை உரிமைகள் மேற்கூறிய அமைச்சரவையால் எடுக்கப்பட்ட முடிவை மீறப்பட்டுள்ளதாக CPA வாதிட்டதப்பட்டுள்ளது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவு

Thanksha Kunarasa

யாழ் அச்சுவேலி மத்திய கல்லூரியில் திருட்டு

Thanksha Kunarasa

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணை விரைவில் – லக்‌ஷ்மன் கிரியெல்ல

Thanksha Kunarasa

Leave a Comment