உலகம் செய்திகள்

94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா ஆரம்பம்

சர்வதேச அளவில் திரைப்பட உலகின் மிக உயரிய விருதாக ஒஸ்கார் விருதுகள் கருதப்படுகின்றன.

நடப்பாண்டிற்கான 94 வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இந்திய நேரப்படி இன்று காலை தொடங்கியது.

ஹாலிவுட் பவுல்வார்ட் பகுதியில் உள்ள டால்பி திரையரங்கத்தில் விழா நடைபெற்றது.

இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர். ஒஸ்கார் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.

இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித்திற்கு முதன்முறையாக கிடைத்துள்ளது. ‘கிங் ரிச்சர்ட்’ திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருதை அவர் வென்றுள்ளார்.

சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா சாஸ்டைனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

‘தி பவர் ஆஃப் தி டாக்’ திரைப்படத்தை இயக்கியதற்காக ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதை வென்றார்.

கோடா, சிறந்த திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்புக்கான ஆஸ்கர் விருதை ஜென்னி பீவன் வென்றுள்ளார்.

டெனிஸ் வில்லெனு இயக்கிய அமெரிக்க திரைப்படமான ‘டியூன்’ திரைப்படம், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

ஜப்பானிய திரைப்படமான ‘டிரைவ் மை கார்’ சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்றது.

சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.

Related posts

நைஜீரியாவில் 16 பேர் சுட்டுக்கொலை

Thanksha Kunarasa

பசில் ராஜபக்சவுடன், இந்திய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

Thanksha Kunarasa

பெலாரஷ்சியர்கள் ஆதரவு

Thanksha Kunarasa

Leave a Comment