இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திறப்பு

இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று திங்கட்கிழமை எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் நண்பகல் 12.30 மணியளவில் காணொளி முறையில் எளிமையாக திறந்து வைக்கப்படவுள்ளது.

ஆனாலும், யாழ்ப்பாண பண்பாட்டு மையம் வெகு விமரிசையாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் திறந்து வைக்கப்பட்ட பின்னரே பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

2015 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பிரதமர் நரேந்திர மோடியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது இந்த பண்பாட்டு மையம் குறித்து அறிவிக்கப்பட்டது.

1.6 பில்லியன் இந்திய நிதியுதவியின் கீழ் 2016 ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் பல்வேறு காரணிகளின் அடிப்படையில் திறப்பு விழாவிற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வந்தநிலையில் இன்றைய தினம் எளிமையாக திறந்து வைக்கப்பட உள்ளது.

Related posts

ஒரே நாளில் இலங்கையில் அச்சிடப்பட்ட பெருந்தொகையான பணம்

Thanksha Kunarasa

சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இராஜினாமா

Thanksha Kunarasa

இந்திய பிரதமருக்கு நன்றி தெரிவித்த இலங்கை பிரதமர்

Thanksha Kunarasa

Leave a Comment