இலங்கை செய்திகள்

பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து தாக்குதல்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் உள்ள பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீடு புகுந்து வன்முறை கும்பல் தாக்குதல் நடாத்தியதில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் குடும்பத்தினர் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , பொலிஸ் உத்தியோகஸ்தரின் கோண்டாவில் வீட்டினுள் நேற்று (27) மாலை 10 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று புகுந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டிற்கு அருகில் இடம்பெற்ற மரண சடங்கில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இரண்டு குழுக்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது மோதலாக மாறியுள்ளது.

அதன் பின்னணியில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் வீட்டினுள் புகுந்த கும்பல் ஒன்று, வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த பொருட்களையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

கும்பலின் தாக்குதலுக்கு இலக்காகி நான்கு பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்!

editor

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!

Thanksha Kunarasa

‘மக்களை துன்புறுத்தும் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம்’ – எதிர்ப்பு பேரணி ஆரம்பம்

Thanksha Kunarasa

Leave a Comment