இலங்கை செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் இன்று(28) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார்.

அவரது வருகைக்காகவும் உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதிக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்கப்பட்டமைக்காகவும் ஜனாதிபதி இதன்போது இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு நன்றி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பில் இன்று(28) ஆரம்பமான BIMSTEC மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்ஷங்கர் நேற்றைய தினம்(27) நாட்டுக்கு வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை

Thanksha Kunarasa

அமைச்சர் காமினி லொகுகேவின் சாரதி கொடூரமாக கொலை

Thanksha Kunarasa

நாடு முழுவதும் சிறீலங்கா இராணுவத்தினர்!!

namathufm

Leave a Comment