இலங்கை செய்திகள்

எரிபொருள் வரிசையில் மற்றுமொரு மரணம்!

அதுருகிரியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற வந்த 85 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 26ஆம் திகதி இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் அதுருகிரிய, போரே, கல்பொட்ட வீதியைச் சேர்ந்த எம். ஜினதாச பெரேரா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வேனில் எரிபொருள் எடுக்க வந்த நபர் வரிசையில் மூன்றாவது நபராக நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக ,அத்துருகிரிய பிராந்திய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த போது பெட்ரோல் பங்கில் நெரிசல் ஏதும் இல்லை என பொலிசார் தெரிவித்தனர்.

அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மத்தியஸ்த முயற்சியில் இறங்கியுள்ள இஸ்ரேல்

Thanksha Kunarasa

சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் – மைத்திரிபால சிறிசேன

Thanksha Kunarasa

அரசாங்கத்துடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படுவதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியுள்ளது – இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்

namathufm

Leave a Comment