தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து இந்தியாவில் இடம் பெற்ற குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார் முல்லைதீவு யுவதி யோகராசா நிதர்சனா.
SRILANKA VS INDIA INTERNATIONAL PRO BOXING CHAMPIONSHIPS 2022 சர்வதேச குத்துச் சண்டை போட்டி நேற்று மாலை 5 மணிக்கு, மதுரவாயில் சென்னையில் இலங்கை மற்றும் இந்திய அணியினர்களுக்கிடையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இப்போட்டியில் இலங்கை அணிவீரர்கள் சார்பாக வவுனியா மாவட்டத்தை சேர்ந்த
S.சிறீதர்சன் T.நாகராஜா ஆகிய இரண்டு வீரர்களும், முல்லைத் தீவைச் சேர்ந்த E.கிருஸ்ணவேணி Y.நிதர்சனா ஆகிய இரண்டு வீராங்கனைகளும் பங்குபற்றினர்.
ஆசிரியர் நந்தகுமார் அவர்களிடம் பயிற்சி பெற்ற குறித்த நான்கு மாணவர்களில் மூவர் தங்கப் பதக்கத்தையும் ஒருவர் சில்வர் பதக்கத்தையும் பெற்றுள்ளனர். அந்த வகையில் போட்டியில் பங்குபற்றிய முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி மருதமடு பகுதியில் வசிக்கும் யோகராசா நிதர்சனா என்ற தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் யுவதியும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
ச.தவசீலன்