தற்போது சிற்றுண்டி உணவு வகைகள் அதிகளவு விற்பனை செய்யப்படும் நிலையில் பொருட்களின் விலைகளும் கடுமையாக அதிகரித்துள்ளன.
இதனால் சிற்றுண்டிகளின் விலைகளும் கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
வடை மற்றும் தேநீர் என்பன அதிகளவு விற்பனை செய்யப்படும் சிற்றுண்டிச்சாலைகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களைக் கூட கொள்வனவு செய்து கொள்ள முடியாத இக்கட்டான நிலையில் பொதுமக்கள் திணறும் பொழுது, நாளுக்கு நாள் ஒவ்வொரு பொருட்களின் விலையும் அதிகரித்து வருகின்ற நிலையில் பெரும் இக்கட்டான நிலையை பொதுமக்கள் எதிர்கொண்டுள்ளனர்.