உலகம் செய்திகள்

பிலிப்பைன்ஸில் எரிமலை சீற்றம்

பிலிப்பைன்ஸில் எரிமலையிலிருந்து கரும்புகை எழுந்ததையடுத்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸின் மனிலாவில் உள்ள டால் எரிமலையில் நேற்று (26) காலை 7 மணியளவில் பலத்த சத்தத்துடன் கரும்புகை வெளியேறத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அம்மாகாண அரசு உத்தரவிட்டது.

எரிமலையிலிருந்து வெளியேறிய புகைமூட்டமானது 1500 மீற்றருக்கும் அதிகமாக மேலுழுந்தது. எரிமலை வெடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்ததைத் தொடர்ந்து 1200இற்கும் மேற்பட்ட மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டால் எரிமலை அடிக்கடி இவ்வாறு புகையை வெளியேற்றி வருவதால் அப்பகுதியில் மக்கள் வசிப்பதற்கு இரண்டாண்டுகளுக்கு முன்பாக தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாரிஸ் செய்ன் நதிக் கரையோர பாரம்பரிய புத்தகப் பெட்டகங்கள் காலம் மறந்து காணாமல் போகுமா?

namathufm

IMF உதவிகளை பெற்றுக்கொள்ள சிறிது காலம் செல்லும்: நிதி அமைச்சர் தெரிவிப்பு

Thanksha Kunarasa

பங்களாதேஷை சேர்ந்த பிக்கு கடத்தப்பட்டார்

Thanksha Kunarasa

Leave a Comment