நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.