இலங்கை செய்திகள்

நாளை BIMSTEC மாநாடு ஆரம்பம்

5 ஆவது BIMSTEC மாநாடு நாளை கொழும்பில் ஆரம்பமாகவுள்ளது.

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா முன்முயற்சி எனப்படும் BIMSTEC மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் வெளிவிவகார அமைச்சர்களும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.

மியன்மாரின் வெளிவிவகார அமைச்சர் இந்த மாநாட்டில் இணைய வழியாக பங்கேற்கவுள்ளார்.

30 ஆம் திகதி BIMSTEC மாநாட்டிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமை தாங்கவுள்ளார்.

உச்சி மாநாடு மற்றும் தொடர்ச்சியான கூட்டங்களின் போது, பிராந்திய குழுவாக BIMSTEC அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் கலந்துரையாடவுள்ளனர்.

இந்த மாநாட்டின் போது BIMSTEC சாசனம் ஏற்கப்பட்டு, பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts

கனடாவின் ஒன்ராரியோ மாநிலத்தில் கரபிறாம் பல்கலாசார விழாவில் ஈழம் சாவடி ! ( படங்கள் இணைப்பு )

namathufm

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானிக்கு 9-வது இடம்

Thanksha Kunarasa

நெடுந்தீவில் 12 தமிழக மீனவர்கள் கைது !

namathufm

Leave a Comment