இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் நபரொருவரை வாகனத்தால் மோதி தள்ளிய கும்பல்

கிளிநொச்சி – கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோதி கொலை செய்ய முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வாகனத்திலிருந்து காயத்துடன் காணப்பட்ட நபர் தப்பி ஓடுவதற்கு முயன்று வீதியில் குதித்து ஓடியுள்ளார்.

இரண்டு தடவைகள் முயன்று மூன்றாவது தடவை குறித்த வாகனத்தை செலுத்தி, அந்த நபரை கடத்தல்காரர்கள் என்று நம்பப்படும் நபர்கள் மோதியுள்ளனர்.

சம்பவத்தினால் குறித்த நபர் படுகாயம் அடைந்துள்ளார். அதேவேளை வாகனமும் விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தை அடுத்து வாகனத்தில் வந்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

20ஆவது திருத்தத்தை நீக்குக – மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து!

Thanksha Kunarasa

இலங்கையில் உக்ரேன், ரஷ்ய பிரஜைகளின் விசா காலம் நீடிப்பு

Thanksha Kunarasa

அரசாங்கத்தின் தேர்தல் நடவடிக்கைகளுக்கே இந்தியாவின் கடன்: எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Thanksha Kunarasa

Leave a Comment