இலங்கை செய்திகள்

இந்தியாவில் இலங்கையின் நான்கு ஆளுமைகளுக்கு கலாநிதி விருது!

திருக்கடவூர் ஸ்ரீ அபிராமி அம்பாள் சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வர சுவாமி மகாகும்பாபிஷேகப் பெருவிழாவில், தருமை ஆதீனம் நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் நான்கு இலங்கை ஆளுமைகளுக்கு  கௌரவ கலாநிதி விருது வழங்கி வாழ்த்தினார்.

இந்நிகழ்வில் “சிவாகம கலாநிதி” என்னும் விருது மரியாதைக்குரிய  யாழ்ப்பாணம் நயினாதீவு சிவஸ்ரீ. ஐ.கை. வாமதேவ சிவாச்சாரியார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

“திருமுறைக் கலாநிதி” என்னும் விருது ஓய்வு பெற்ற யாழ்ப்பாணப் பல்கலக்கழகப் பேராசிரியர். நா.வி.மு நவரத்தினம் ஓதுவார் (நயினை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

“பல்கலை வித்தகக் கலாநிதி”என்னும் விருது பலவழிகளிலும் ஊக்குவிப்பவரும் தமிழ்- திருமுறை பதிப்பிலும் Thevaram.org தளம் வழி பெரும் சைவப்பணி செய்பவருமான காந்தளகம் மறவன் புலவு க.சச்சிதானந்தம் (சிவசேனை) அவர்களுக்கு வழங்கப்பட்டது.

“நாதஸ்வரக் கலாநிதி” என்னும் விருது உலகளாவிய நிலையில் தன்னிகரில்லா ஆளுமையும், எளிமையான பண்புநலனும் ஒருங்கே பெற்ற நமது ஈழ நல்லூர் பாலமுருகன் அவர்களுக்கு தரப்பட்டது.

Related posts

பிரான்சில் சிறப்பாக இடம் பெற்ற தமிழியல் பட்டப்படிப்பு புதுமுக மாணவர் வரவேற்பு நிகழ்வு ! 

namathufm

இலங்கையில் கோவிட் தடுப்பூசிகளை தடுக்கும் 8 மர்மக் கும்பல் – புலனாய்வுப் பிரிவு தகவல்

Thanksha Kunarasa

20ஆவது திருத்தத்தை நீக்குக – மகாநாயக்கர்கள் கூட்டாக வலியுறுத்து!

Thanksha Kunarasa

Leave a Comment