உலகம் செய்திகள்

300 ஈரோ உதவிக் கொடுப்பனவு … மாதாந்தப் பயண ரிக்கெட் 9 ஈரோ!

எரிசக்திச் சுமையை எதிர் நோக்கும் ஜேர்மனிய மக்களுக்கு நிவாரணம் ஜேர்மனிய அரசாங்கம் எரிசக்தி நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான நிவாரணத் திட்டங்களை அறிவித்திருக்கிறது.

ஜேர்மனியின் ஆளும் முக்கிய மூன்று கட்சிக் கூட்டணி அரசு(SPD, Green and FDP) ஏற்கனவே வாக்குறுதி அளித்திருந்த படிநிவாரணத் திட்டங்களை கடந்த வியாழனன்று வெளியிட்டுள்ளது. அதன்படி –

*வரி செலுத்தும் ஜேர்மனியர்கள் அனைவருக்கும் ஒரு தடவை மட்டுமான நிதி உதவியாக 300 ஈரோக்கள் வழங்கப்படவுள்ளன. எரிவாயு, மின்சாரம், இன்ரநெற் தண்ணீர் உள்ளடக்கிய (home utilities) கட்டணங்களின் அடிப்படையில் பாவனையாளர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும்.

*மூன்று மாதங்களுக்கு பெற்றோல், டீசல்என்பவற்றின் மீதான வரிகள் குறைக்கப்படுகின்றன. இதன்படி பெற்றோலுக்கு30 சதங்களும் டீசலுக்கு 14 சதங்களும் விலைக் கழிவு ஏற்படும்.

*நாடு முழுவதும் பொதுப் போக்குவரத்துகளுக்கான மாதாந்தப் பயண ரிக்கெற் அடுத்த மூன்று மாதங்களுக்கு மாதாந்தம் ஒன்பது ஈரோக்களாகக் குறைக்கப்படுகிறது. பொதுவாக உள்ளூர் பொதுப் போக்குவரத்துகளுக்கான மாதாந்தரிக்கெட் கட்டணம் சுமார் 59 ஈரோக்கள்முதல் 114 ஈரோக்கள் வரை இடத்துக்கிடம் வெவ்வேறு தொகைகளில் அறவிடப்படுகின்றது.

*அரசின் சமூக நல உதவி பெறும் குடும்பங்களுக்கு நூறு ஈரோக்கள் கொடுப்பனவு கிடைக்கும். அதேசமயம் குழந்தைகளுக்கு தலா நூறு ஈரோக்கள் வழங்கப்படும். இந்த திட்டம் ஏற்கனவே அரசினால் அறிவிக்கப்பட்டிருந்தது. ரஷ்யப் போரினால் கடும் எரிசக்தி நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஐரோப்பிய நாடுகளில் ஜேர்மனி முதலிடத்தில் உள்ளது. தொழிற்சாலைகள் நிறைந்த நாடாகிய ஜேர்மனி எரிவாயுத் தடையினால் பெரும் ஆட்டம் காணவுள்ளது.

ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகளுக்கான எரிசக்திவிநியோகங்கள் அடுத்த சில மாதங்களில் பங்கீட்டு அடிப்படையில் – சுழற்சி முறையில் – குறைக்கப்படவுள்ளன என்ற தகவலை நாட்டின் எரிசக்தி நிறுவனங்கள் விடுத்துள்ளன. எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்களுக்கும் தொழில் துறைகளுக்கும் ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புகளுக்கு நிவாரணங்களை வழங்குவதுடன் மாற்று எரிசக்தி வளங்களைத் தேடுவது உட்படபாரிய நிதிச் செலவில் அரசு இந்தப் புதிய திட்டங்களைத் தயாரித்திருக்கிறது. ரஷ்யாவின் எரிவாயுவில் தங்கியிருப்பதில்லை என்ற முடிவின் படி தன்னிறைவுக்கான மாற்றுத் திட்டங்கள் 2024 முதல்முடுக்கிவிடப்படவுள்ளன.

செய்தி ஆசிரியர் மூத்த ஊடகர் குமாரதாசன் பாரிஸ்.

Related posts

கணவரின் படத்தை பார்க்க முடியாமல் சென்ற மனைவி ஷாலினி.

Thanksha Kunarasa

இந்தியாவில் இலங்கையின் நான்கு ஆளுமைகளுக்கு கலாநிதி விருது!

namathufm

புதுக்குடியிருப்பு பகுதியில் வாகனத்தில் கடத்தப்பட்ட மாணவன் – பெரும் பரபரப்பு!

namathufm

Leave a Comment