அவிசாவளையில், பெண்ணொருவரை காப்பாற்ற முயற்சித்த இளைஞர்கள் இருவர் சீதாவக்க ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவிசாவளை – தெஹியோவிட்ட, சீதாவக்க ஆற்றில் நீராடச் சென்ற யாத்திரை குழுவை சேர்ந்த பெண்ணொருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
இந்த நிலையில் யாத்திரை குழுவொன்றைச் சேர்ந்த இரு இளைஞர்கள் அப்பெண்ணை காப்பாற்ற முயற்சித்துள்ளனர்.
இருந்த போதும் அவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதேவேளை நீரில் மூழ்கிய பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ராஜகிரிய மற்றும் கொழும்பு – 12 ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.