இந்தியா செய்திகள்

புர்ஜ் கலீபாவில் ஒளிர்ந்தது செம்மொழியான தமிழ்

துபாயில் கடந்த அக்டோபர் 1 ஆம் திகதி முதல் சர்வதேச கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சி மார்ச் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. மார்ச் 25 முதல் மார்ச் 31-ம் தேதி வரை அங்கு தமிழ்நாடு வாரம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, சர்வதேச முதலீடுகளை ஈர்க்க 4 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார். இந்த எக்ஸ்போ கண்காட்சியில் உள்ள தமிழ்நாட்டிற்கான அரங்கை நேற்று திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டின் தொழிற்சாலைகள், உட்கட்டமைப்பு என அனைத்தும் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த அரங்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், துபாயில் உள்ள உலகின் மிக உயரமான புர்ஜ் கலீபா கட்டிடத்தில் தமிழரின் பண்பாட்டையும் பெருமையையும் விளக்கும் வகையில் காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

Related posts

துபாயில் யுவன்

Thanksha Kunarasa

இலங்கையில் கைப்பேசிகளின் விலைகளும் அதிகரிப்பு

Thanksha Kunarasa

பெரசிட்டமோல் உட்பட்ட மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

Thanksha Kunarasa

Leave a Comment