இந்தியா இலங்கை செய்திகள்

கொழும்பு விரைகிறார் இந்திய வெளி விவகார அமைச்சர்

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, 28 ஆம் திகதி கொழும்பில் ஆரம்பமாகவுள்ள பிம்ஸ்டெக் அமைப்பின் 5 ஆவது மாநாட்டில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உரையாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மக்களின் வாழ்க்கையை பாதித்துக் கொண்டிருக்கும் நிலையில், அண்டை நாடான இந்தியா அவசர உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம்

Thanksha Kunarasa

பிரான்சில் தொற்றுத் அதிகரித்தால் மீண்டும் மாஸ்க் கட்டாயமாக்கப்படும்!

namathufm

இலங்கையில் கொரோனா பாதிப்பு குறித்த முழுமையான விபரம்!

editor

Leave a Comment