இலங்கை செய்திகள்

கார் சில்லுக்குள் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை! யாழில் சம்பவம்

யாழில் தந்தை பின்நோக்கி செலுத்திய காரின் சக்கரத்திற்குள் சிக்கிய ஒன்றரை வயது ஆண் குழந்தை காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் நேற்று கிளாலி – எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வீட்டிலிருந்து காரை வெளியே கொண்டு செல்வதற்காக தந்தை பின்புறம் நகர்த்தியபோது, பின்புறம் நின்றிருந்த குழந்தை சக்கரத்திற்குள் சிக்கியுள்ளது.

இதில் காயமடைந்த குழந்தை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்மொழியப்பட்ட திருத்தம் ! உறுதியான பாதுகாப்பை வழங்கும் – வெளிவிவகார அமைச்சு

namathufm

சர்வதேச அரசியலில் சிக்கும் மதுபானம்……..!

namathufm

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை எதுவும் இல்லை பிரதமர் ரணில் !

namathufm

Leave a Comment