இலங்கை செய்திகள்

அரிசி விலை அதிகரிப்பு

அரிசியின் விலையில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாறு அரிசியின் விலையில் இந்த வாரம் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அரிசி விநியோகம் வீழ்ச்சியடைந்துள்ளமையே இதற்குக் காரணமாகும் என ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான உள்ளூர் அரிசி வகைகளின் விலைகளும், 3 ரூபா முதல் 13 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

அத்துடன், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின் விலைகள், 9 ரூபா முதல் 18 ரூபாவுக்கு இடைப்பட்ட அளவில் அதிகரித்துள்ளன.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமையால், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைன் அதிபர் பொம்மையால் குவிந்த லட்சக்கணக்கான டொலர் நிதி

Thanksha Kunarasa

சீனா இராணுவ சக்திக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு – உலக நாடுகள் பதற்றம் !!

namathufm

மன்னார் அடம்பன் – உயிலங்குளம் வீதியில் திடீர் நேர்கை – இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

namathufm

Leave a Comment