இலங்கை செய்திகள்

அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளது விமானப்படை

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கையில், ​​எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், பிரதமர், ஜனாதிபதி மற்றும் வெளிநாட்டு அரச தலைவர்களின் விஜயங்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதற்கு விமானப்படை தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

Related posts

காலிமுகத்திடலில் நிறுவப்பட்ட வலையமைப்பு கோபுரத்தை அகற்றிய டயலொக்!

Thanksha Kunarasa

இலங்கை, யாழ்ப்பாணம், கொய்யாத்தோட்ட கொலையாளியின் வாக்குமூலம்.

Thanksha Kunarasa

மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள்..!!!

namathufm

Leave a Comment