இலங்கை செய்திகள்

வவுனியா செட்டிக்குள பாடசாலை ஆசிரியர் மீது தாக்குதல்!

வவுனியா செட்டிக்குளம் வீரபுரம் மணிவாசகர் மகா வித்தியாலயத்தில் ஆசிரியர் மீது மூன்று நபர்கள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (25) பாடசாலை ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் காலை 8.40 மணியளவில் பாடசாலைக்குள் சென்ற மூன்று நபர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தில் நின்ற ஆங்கில பாட ஆசிரியரான சாந்தகுமார் (வயது- 45) என்பவர் மீது கட்டையினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

மற்றைய ஆசிரியர் இதனை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பித்துச்சென்றுள்ளனர்.

தலையில் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் காணப்பட்ட ஆசிரியர் சக ஆசிரியர்களின் உதவியுடன் செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிக்குளம் காவல் துறை  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பாடசாலையில் பழைய மாணவர்கள் , ஆசிரியர்கள் ஒன்று கூடியுள்ளமையினால் பதட்ட நிலைமை நிலவி வந்ததுடன் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

Related posts

உலகப் புகழ் பூனையும் உக்ரைன் போரில் தப்பி பிரான்ஸில் தஞ்சம்!

namathufm

இலங்கைக்கு வழங்கும் கடனுக்கான உறுதிப்பாடு அவசியம் –IMF

Thanksha Kunarasa

ஜனாதிபதியை விமர்சித்த பெண் ஊடகவியலாளர் – நிகழ்ச்சிகளில் நீக்கப்பட்டார்.சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம்!

namathufm

Leave a Comment